ஆன்லைனில் பல வகைகளில் பணம் சம்பாதிக்க முடியும். அதில் குறிப்பிட்ட சில வழிகளை இங்கே பார்க்கலாம்.

  1. கூகுள் விளம்பரங்கள் (Google Adsense)
  2. சந்தைப்படுத்தல்  (Affiliate Marketing)
  3. கதை எழுதுவது (Online Story Writing )


கூகுள் விளம்பரங்கள் (Google Adsense)
ஆன்லைனில் நீங்கள் எந்த ஒரு வலைத்தளத்தையும் பார்வையிட்டிருந்தால், அங்கே  கூகுள் (Google)  விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரங்கள் மூலம் வலைத்தள உரிமையாளர் குறிப்பிட்ட சில  வருமானங்கள் பெறுவதற்கு காரணமாக உள்ளது.
கூகுள் விளம்பரங்கள் பெறுவதற்கு கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) என்ற பகுதி மிகவம் உதவியாக இருக்கும். கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) பற்றிய சிறந்த விஷயங்களில் ஒன்று அது அமைப்பது மிகவும் எளிது.  இது முற்றிலும் இலவசமாக கிடைக்கும். 
கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) பெறுவதற்கு நீங்கள் ஒரு வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒரு இலவச Google AdSense கணக்கிற்கான பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவுசெய்தால்  கூகுள் உங்கள் வலைத்தளத்தில் சேர்க்க ஒரு தனிப்பட்ட குறியீடு கொடுக்கும். அந்த குறியீட்டை உங்கள் வலைத்தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் பதிய வேண்டும். அவ்வாறு பதிவதன் மூலம் கூகுள் (Google) உங்களது வலைத்தளப் பக்கங்கள், பயனாளர் கணக்கு மற்றும் வருவாய் ஆகியவற்றை உங்கள் சார்பாக கண்காணித்து வரும். 
அவ்வாறு கண்காணித்து தகுந்த வலைத்தத்தில் தனது விளம்பரங்களை கண்பிக்க ஒப்புதல் அளிக்கும்,. அவ்வாறு காட்சிக்கு வரும் விளம்பரங்களை பார்க்கும் பார்வையாளர்கள் அந்த விளம்பரங்களை சொடுக்கி அதன்மூலம் அந்த விளம்பரத்தின் குறிப்பிட்ட காட்சிப்பகுதிக்கு சென்று பார்ப்பதன் மூலம் வலைத்தளபதிவருக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும்.





சந்தைப்படுத்தல் - Online Affiliate Marketing
சந்தைப்படுத்தல் என்றால் நமக்கு தெரிந்த ஒரு பொருளை அல்லது வலைத்தளத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் அந்த வலைத்தளத்தில் ஏதேனும் பொருட்கள் வாங்கினால் நமக்கு வருமானம் கிடைக்கும். இந்த விற்பனை நமதுமூலமாக நடந்த காரணத்திற்காக நமக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும்.
ஆன்லைனில் சந்தைப்படுத்தல் மூலம் மிக வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க முடியும். நாம் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது எவ்வாறோ அதுபோல் நம் முலமாக நமது நண்பர்களோ அல்லது உறவினர்களோ அல்லது நமக்கு தெரிந்த ஒருவர் ஆன்லைனில் பொருகள் வாங்கும்போது அதற்கு காரணமாக இருந்ததற்காக அந்த நிறுவனம் நமக்கு குறிப்பிட்ட ஒரு பகுதியை இடைத்தரகர் என்ற முறையில் நமக்கு வருமானாமாக கொடுக்கும்.





ஆன்லைன் கதை எழுதுவது - ONLINE STRORY WRITING
உங்களுக்கு கதை மற்றும் படைப்பு உருவாக்கும் திறமை இருந்தால், ஆன்லைனில் உங்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது. கதை  எழுதுவதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
முதலில் உங்களது பகுதி நேர படைப்பிற்கு சிறு அளவில் வெகுமதி கிடைக்கும். உங்கள் வருமானத்தை கூடுதலாக வழங்குவதற்கு ஆன்லைன் பகுதி நேர வேலை, முழு நேர வேலை என்று பல விதமான வாய்ப்புகள் உள்ளது. முதலில் பகுதி நேர படைப்பில் ஈடுபட்டு காலப்போக்கில், முழுநேர பணியாக மாற வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் தொடங்குவதற்கு உதவுவதற்காக பயிற்சி கட்டமைப்புகள்  (Working Board) பின்வரும் லிங்கில் நீங்கள் உபயோகிக்கலாம். https://www.upwork.com போன்ற வலைத்தளங்களில் ஸ்டார்டர் எழுத்து வேலைகள் கண்டுபிடிக்க மிகவும் எளிது.