பட்டா என்பது நில வருவாய் பதிவு. இது நிலத்தின் உரிமையை நிருவுவதற்கான ஒரு ஆவணம். ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரின் பெயரில் பட்டா இருக்கும். பட்டா பதிவேடு தாலுகா அலுவலகங்களில் பராமரிக்கப்படும் மேலும் அனைத்து நில உடைமைகளின் உரிமை விவரங்களும் இதில் இருக்கும்.

பட்டாவில் நிலம் அமைந்திருக்கும் மாவட்டத்தின் பெயர், வட்டம் மற்றும் கிராமத்தின் பெயரும் பட்டாவின் எண்ணும் இடம்பெற்றிருக்கும். மேலும் அந்த நிலத்தின் உரிமையாளர் பெயர் அவரது தந்தையார் பெயரோடு இடம்பெற்று இருக்கும். 

நஞ்சை நிலமா அல்லது புஞ்சை நிலமா என்ற விவரமும், நிலத்தின் பரப்பு விவரம், தீர்வை தகவல்கள் ஆகியவை இருக்கும்.

தமிழக அரசின் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் பார்த்துக்கொள்ளலாம்.

https://eservices.tn.gov.in/eservicesnew/home.html