கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய வேண்டிய முக்கிய அம்சங்கள். 




கல்லூரி விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான 7 எளிய வழிமுறைகள் (how to fill college application in tamil) குறித்து தற்போது பார்க்கலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய கல்லூரிகளின் பட்டியல் எந்தெந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க போகிறீர்கள் என்பது தொடர்பான பட்டியலை தயார் செய்வது நல்லது. இதில் உங்கள் ஊர், இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்து வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை தெரிந்து வைத்தல் பொதுவாக கல்லூரிகளில் மார்ச்சில் இருந்து மே மாதம் வரை விண்ணப்பங்கள் வழங்குவார்கள். படிக்க முடிவு செய்த கல்லூரியின் விண்ணப்பத்தை மட்டும் வாங்கினால் போதும் என்ற மனநிலையில் இல்லாமல் மற்ற கல்லூரிகளின் விண்ணப்பத்தையும் வாங்கி வைத்தால் அது உபயோகமாக இருக்கும்.

சமர்ப்பிக்கும் காலக்கெடு பற்றி விழிப்புடன் இருத்தல் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு குறித்து தெரிந்து வைத்து இருத்தல் வேண்டும். சில சமயம் குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை கொடுக்க தவறினால் கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்படலாம். அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும் கல்லூரி விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு பூர்த்தி செய்ய வேண்டும். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவது சிறந்தது. 



ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது டைப் செய்வதில் கவனம் தேவை. பெட்டிகளை காலியாக விட வேண்டாம் விண்ணப்பத்தில், தெரியாத பெட்டிகளை காலியாக விட வேண்டாம். சில சமயம் இதன் காரணமாக கூட விண்ணப்பம் நிராகரிக்கப் பட வாய்ப்புள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, டிராஃப்டில் வைத்து பின்னர் சமர்ப்பித்தல் சிறந்தது. தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் உயர்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைந்த மார்க் ஷீட், சேர்க்கை தேர்வு மதிப்பெண், உங்களைப் பற்றிய குறிப்புக் கட்டுரை, பரிந்துரை கடிதம், போர்ட்ஃபோலியோ உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும். இது ஒவ்வொரு கல்லூரிகளுக்கு ஏற்ப மாறுபடும். பிழை திருத்தம் மற்றும் நேர்மையாக இருத்தல் விண்ணப்பங்களில் எழுத்துப் பிழை அல்லது தவறாக டைப் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். 

பெற்றோர் அல்லது நண்பர்களிடம் படித்து பார்க்க சொல்லி பிழைகளை களையலாம். அதேபோல் உங்களைப் பற்றி தவறான தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை நீக்கி நேர்மையான/ சரியான தகவலை கொடுக்க வேண்டும். பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பங்களை நகல் எடுத்து வைப்பது நல்லது. வருங்காலங்களில் இவை நமக்கு உதவக்கூடும். 

இந்த 7 எளிய வழிமுறைகளை பின்பற்றி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நல்ல கல்லூரியில் சீட் கிடைக்க எங்கள்  சார்பாக வாழ்த்துக்கள்.